பரபரப்பாகும் ராஜஸ்தான் அரசியல் களம்.! காங்கிரஸ் முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.!
இன்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் முக்கிய இளம் தலைவரான சச்சின் பைலட் நேற்று உண்ணாவிரம் நடத்தினார்.
சச்சின் பைலட் உண்ணாவிரதம் :
முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியது என்றும், இந்தாண்டு இறுதியில் தேர்தல் வரும் நிலையில் இன்னும் பாஜக ஊழல் குறித்து ஆளும் தனது கட்சி (காங்கிரஸ் அரசு) விசாரணை நடத்தவில்லை என சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.
குற்றசாட்டு :
இப்படி விசாரணை நடத்தாமல் இருந்தால், காங்கிரஸ் கட்சி மீதான மக்கள் பார்வை மாறிவிடும் என சச்சின் பைலட் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சமயத்தில் தான் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
அமைச்சரவை கூட்டம் :
காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.