ரூ.1,500_யை வைத்துக்கொண்டு ரூ.2,000 கோடி சம்பாதித்த மசாலா வியாபாரி….!!
வெறும் 1,500 ரூபாயை வைத்துக்கொண்டு சுமார் 2000 கோடியை சம்மதித்துள்ளார் பத்மபூஷண் விருது பெற்ற பால் குலாடி…!!
இந்தியா பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாக பிரிக்கப்பட்டபோது வெறும் 1, 500 ரூபாயுடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு குதிரை ஓட்டியாக இந்தியா வந்த தரம் பால் குலாடி. இந்திய வந்த இவர் சுய தொழிலாக மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.இந்நிலையில் அவருக்கு தற்போது இந்தியா மற்றும் துபாயில் உள்ளிட்ட அண்டை நாடுகளில் 18 தொழிற்சாலைகள் உள்ளன. தஹ்ரபோது அவரின் மொத்த சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ஆகும். இந்நிலையில் அவருக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் மட்டும் 62 வகை பொருட்களை விற்பனை செய்யும் அவரது நிறுவனம் சுமார் 80 சதவீத சந்தைப் பங்களிப்பு கொண்டுள்ளது.