parliment [Imagesource : Representative]
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 18) முதல் வரும் வெள்ளி (செப்டம்பர் 22) வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. தற்பொழுது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது. இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சாதனைகள், னுபவங்கள் குறித்து இன்று சிறப்பு விவாதம் நடைபெற இருக்கிறது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு முதல் நாளில் விவாதிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதா பற்றி இரு அவைகளிலும் விவாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இது தவிர மற்ற சில மசோதாக்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. வழக்கம்போல, நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கு முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தினரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விவாதித்து நடத்தி முடித்து தர வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அதேபோ, நேற்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த சிறப்பு கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரல் சரிவர குறிப்பிடப்படாததால் சில அதிரடி மசோதாக்கள் திடீரென விவாதத்திற்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…