இன்று விண்ணில் பாய்கிறது ககன்யா மாதிரி விண்கலம்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு, ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும்.
இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி விண்கலம் 16.6 கி.மீ தூரம் சென்றதும் வினைகளத்தில் வீர்ரகள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும்.
பின் பாராசூட் மூலம், பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கப்படும். இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் வங்கக்கடலில் விழுந்த விண்கலத்தை மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025