டெல்லியில் நுழைந்தது வெட்டுக்கிளிகளின் படை.! தடுக்க ஆயத்தமான மாநில அரசு.!

விவசாய நிலங்களை நாசமாக்கும் வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என டெல்லி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்களை குறி வைத்து விவசாய பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகளின் படையானது. இந்தியாவின் தலைநகரான டில்லியில் நுழைய தொடங்கியுள்ளது என அம்மாநில அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த பகுதியானது ஹரியானா எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
மேலும், அம்மாநில வனத்துறை தெரிவிக்கையில், வெட்டுகிளிகளின் படையை விரட்ட அரசு உத்தரவின்படி, சத்தம் எழுப்பும் கருவிகளான டிரம்ஸ்,டிஜே ஒலிபெருக்கிகள் மற்றும் ரசாயன மருந்துகளை தெ;ளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த வெட்டுக்கிளிகளின் படையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுகிளிகளின் படையானது ஹரியானாவில் உள்ள ஜாஜர் மாவட்டத்திலிருந்து அடுத்ததாக பல்வால் பகுதி வழியாக உத்தரப்பிரதேசம் செல்லும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025