ரயில் : பயண நேரத்தில் அவசரம் காரணமாக பாதியில் இறங்கும்போது பலர் விபத்தில் சிக்கி வருகிறார்கள். ஆபத்தை உணராமல் அப்படி செய்யும் விஷயங்கள் கடைசியில் அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அதைப்போலவே, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் எடுக்கவேண்டும் என்று சில இளைஞர்கள் வினோதமான ஸ்டண்ட் செய்து இறுதியில் உயிரிழக்கும் பரிதாபமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் வழக்கமானது. அந்த வகையில், சமீபத்தில் இது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ரயிலில் இருந்து இறங்கும் போது இளைஞர் ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.
இளைஞன் தான் இறங்க வேண்டிய நிலையத்தைக் கடந்ததும் கீழே இறங்க முடிவு செய்து வேகமாக செல்லும் ரயிலில் கீழே விழுந்தால் நமக்கு என்ன ஆகும் என்ற ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். வாசலில் நின்று கொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது ரயில் மிகவும் வேகமாக சென்ற காரணத்தால் இறங்கும்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.
இரும்பு கம்பியை பிடித்து தரையில் இறங்க முயற்சி செய்யபோது கீழே விழுந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ரயிலின் அடியில் சிக்க முயன்ற நிலையில், அதிர்ஷவசமாக உயிர்பிழைத்தார். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற தவறுகளை யாரும் செய்யாதீங்க என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…