ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! சாலை விபத்தில் 1,48,000 பலி..!அதிகமாக உயிரிழந்தவர்கள் எந்த மாநிலம் தெரியுமா ?

Default Image

சாலையில் விபத்துக்களை தடுக்க அரசும் , போக்குவரத்து காவல்துறையும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.ஆனாலும் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பொருத்தவரை தினமும்  சாலை விபத்துக்கள் மூலமாக  405 பேர் உயிரிழக்கின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் நான்கு லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்து உள்ளது. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். நான்கு  லட்சத்து 70,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனைத்து விபத்துகளும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலையில் தான் விபத்துக்கள் நடக்கின்றன.

இந்த 2017ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 86 சதவீதம் பேர் ஆண்கள் என்பது அவர்கள் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தான் அதிக விபத்துகள் நடந்து உள்ளது.ஆனால்  உத்திரபிரதேசத்தில் தான் அதிகமான பேர் உயிர் இழந்து உள்ளனர்.

கடந்த 2017 -ம் ஆண்டு  உத்தரபிரதேச சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,124 பேரும் , அடுத்ததாக தமிழ்நாட்டில் 16,157 பேரும் இறந்து உள்ளனர்.இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 12,264 மற்றும் ராஜஸ்தானில் 10446 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே இதுபோன்ற உயிர் இழப்பை தவிர்க்க நாம் வாகனங்களை வேகமாக ஓட்டுவது , தவறான  பாதையில் செல்லுதல் அதனால் இது போன்றவற்றை விபத்து ஏற்பட முக்கிய காரணங்களாக அமைக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்