கோவிலுக்கு ரூ.100 கோடி காசோலை அளித்த பக்தர்! ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Lakshmi Narasimha Swamy Temple -fake check

ஆந்திரப் பிரதேசம்: விசாகப்பட்டினம் மாவட்டம் சிம்ஹாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வராஹ லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் உண்டியலில் பக்தர் ஒருவர் செலுத்திய 100 கோடி ரூபாய்க்கான காசோலையைக் கண்டு கோயில் அதிகாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

பிரசித்தி பெற்ற இந்த வராஹ லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் என்னும் பணி நடைபெறும். வழக்கம் போல், இம்முறையும் கோவிலின் உண்டியலில் பணத்தை எண்ணும் பணி நடந்து வந்தது.

அப்போது, உண்டியலில் கிடந்த ரூ.100 கோடி காசோலையைக் கண்டு ஷாக் ஆன கோவில் அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் அந்த 100 கோடி ரூபாய்க்கான காசோலை எண்ணை கொண்டு, வங்கியில் சோதனை செய்ததில், வங்கி அதிகாரிகள் நன்கொடை செலுத்தியவரின் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருப்பு இருப்பதாக பதிலளித்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அந்த பக்தர் பொட்டேபள்ளி ராதா கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில், ராதா கிருஷ்ணாவின் முகவரி விவரம் கோரி வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதவும், பக்தரின் நோக்கம் தவறாக இருந்தால் அவர் மீது காசோலை பவுன்ஸ் வழக்கு பதிவு செய்யவும் கோயில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்