பரபரப்பு…காங்.தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது பாலியல் வழக்கு!

Default Image

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன்(வயது 71) மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும்,மாதவன் மீது “கிரிமினல் மிரட்டல்” வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக,பாதிக்கப்பட்ட பெண்,டெல்லி போலீசில் அளித்த புகாரில்: “பிப்ரவரி 2020 இல் என் கணவர் இறந்த பிறகு,நான் வேலை தேட ஆரம்பித்தேன்,மாதவனுடன் தொடர்பு கொண்டேன்.அவர் முதலில் என்னை நேர்காணலுக்கு அழைத்தார்.இதனைத் தொடர்ந்து.அவர் என்னுடன் வீடியோ கால் செய்து வாட்ஸ்அப்பில் பேச ஆரம்பித்தார்.

அதன்பின்னர்,அவர் என்னை உத்தம் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று,தனது காருக்குள் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தினார்.பிப்ரவரி 2022 இல்,அவர் என்னை சுந்தர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று என் சம்மதம் இல்லாமல் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்,” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால்,இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஒரு சதி மற்றும் ஆதாரமற்றது என்று பிபி மாதவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரின் தனிப்பட்ட செயாலாளர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்