மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்!!
நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் தொடங்கியது.பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் பியூஷ் கோயல்.அவர் உரையில், விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் அளிக்கப்படும்.மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3% வட்டி சலுகை அளிக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படும்.கடனை திருப்பி செலுத்தும் சமயத்தில் மேலும் 3% மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.