பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்.? டெல்லியில் மாணவர்கள் – காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு.!

Default Image

தடை செய்ப்பட்ட ஆவணப்படத்தை திரையிட முயன்றதால் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், டெல்லி காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

டெல்லி பல்கலை கழகத்தில் இன்று கல்லூரி மாணவர்களுக்கும், டெல்லி காவல் துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரால் குண்டு காட்டாக தூக்கி கல்லூரி வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர்.

2002இல் குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படத்தில் அப்போது குஜராத் முதல்வராக பதவியில் இருந்த பிரதமர் மோடி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசு குஜராத் கலவரம் தொடர்பான ஓர் ஆவணப்படத்தை தடை செய்தது.

இந்த தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட திட்டமிட்டு இருந்தனர். இதனை அடுத்து, அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருந்தும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்ததால், அங்கு வந்த டெல்லி காவல்துறைக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வளாகத்தின் வெளியே கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்