மெடிக்கல் ஸ்டோர் மீது மோதிய பள்ளி வாகனம்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Mumbai Road Accident

மும்பை: கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள மீரா சாலையில் இருக்கும் பூனம் சாகர் என்னும் பகுதியில் இரவு 8.45 மணி அளவில் வேகமாய் வந்த பள்ளி வாகனம் ஒன்று நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது மோதி பின் அங்கிருந்த மெடிக்கல் ஸ்டோர் மீதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்தப்பினார்கள் என்றே கூறலாம். அந்த வாகனத்தை ஒட்டி கொண்டு வந்த 22 வயதான அப்துல் கலாம் என்பவர் கார் ஸ்டார்ட் செய்த உடனே கவனக்குறைவால் காரின் கட்டுப்பாட்டை இழந்து  நின்று கொண்டிருந்த காரின் மீது மோதியிருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக அந்த மெடிக்கல் ஸ்டோருக்குள் யாருமே இல்லை. மேலும் இந்த விபத்தில் எந்த ஒரு பெரிய காயமும், யாருக்கும்  ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், வாகனத்தை ஒட்டி வந்த அந்த அப்துல் கலாம் என்னும் இளைஞரை சுற்றி இருந்தவர்கள் காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், செயின்ட் ஜோசப் பள்ளியின் கார் எப்படி இவருக்கு கிடைத்தது என்பது பற்றியும் இந்த விபத்து குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வறுகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்