பொறுப்புமிக்க குடிமகன்! ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் விளக்க மனு தாக்கல்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் 21-ஆம் தே தி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் இந்த சமயத்தில் சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணையில் சிதம்பரத்தின் மனு மீது சிபிஐ 7 நாட்களில் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
பின்னர் சிதம்பரத்தின் காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் காவலை நீடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.பின் ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.சிதம்பரத்தின் மனு மீது சிபிஐ 7 நாட்களில் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று வழக்கின் விசாரணை நடைபெறவுள்ள நிலையில் சிதம்பரம் தரப்பில் விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த விளக்கத்தில், எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமீன் கிடைத்தாலும் எங்கும் செல்ல மாட்டேன் என்றும் ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு என்று தெரிவித்துள்ளார். மேலும் எனது குடும்பம் பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக வசித்து வருகிறது .என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.