குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் டிரம்ப் சிறப்புரையாற்றினார். பின், ஆக்ரா சென்றார் டிரம்ப், அங்கு அவர், மனைவி மெலானியாவுடன் தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தனர்.இறுதியாக நேற்று இரவு டெல்லியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் வரவேற்றனர்.குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…