581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறையினர்.
உத்திரபிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறை அதிகாரிகள் 581 கஞ்சாக்கள் கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
ஷெர்கர் காவல் நிலையத்தில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் 195 கிலோவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடத்தல்காரர்களின் குற்றத்தை நிரூபித்து, தண்டனை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவே சமர்ப்பிக்குமாறு மதுரா காவல்துறையினருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை சார்பில் கஞ்சாவின் மாதிரியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்க முடியாது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட 581 கஞ்சாவையும் காட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கு உத்தரபிரதேசத்தின் மதுரா காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையங்களின் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 581 கிலோகிராம் கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாகக் கூறினர். இந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும்.
இந்த நிலையில், அறிக்கைக்கு பதிலளித்த கூடுதல் மாவட்ட நீதிபதி, ஆவணங்களை நவம்பர் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…