உத்தரபிரதேசத்தின்,சாண்டௌலி கிராமத்தில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசு,அரிய கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அதாவது,அக்கன்றுக் குட்டிக்கு இரண்டு வாய்,இரண்டு காதுகள் மற்றும் நான்கு கண்கள் கொண்ட இரண்டு தலை உள்ளது.எனினும்,பசுவும், கன்றுவும் ஆரோக்கியமாக உள்ளன.
இதனால்,அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள்,இதனை இயற்கையின் அதிசயம் என்று கருதினாலும்,கிராமத்தில் உள்ள சிலர், அக்கன்றை ஒரு ‘தெய்வீக அதிசயமாக’ கருதுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,இந்த செய்தி பரவிய பின்னர்,அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த அரிய நிகழ்வைக் காண ஆர்வத்துடன் திரண்டு செல்கின்றனர்.
மேலும் இதுகுறித்து சாண்டௌலி தலைமை கால்நடை மருத்துவர் டாக்டர் சத்ய பிரகாஷ் பாண்டே கூறுகையில்: “கரு வளர்ச்சியின் போது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்கிறது.அதன்படி,கருப்பையில் கரு வளர்ச்சியின் போது,செல்கள் பல பகுதிகளாகப் பிரிகின்றன,இந்தச் செயல்பாட்டின் போது சில சமயங்களில் உயிரணுக்களின் கூடுதல் வளர்ச்சியும் இருக்கும்.இதனால்தான் இரண்டு தலைகள் உருவாகின்றன.எனவே,இது ஒரு தெய்வீக அதிசயம் அல்ல.”,என்று கூறினார்.
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…