டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
கேரளாவில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில், சரியாக வேலை செய்யாத ஊழியர்களை, நாய் போல ஊர்ந்து செல்ல கட்டாயப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர் குடிப்பதைக் காணக்கூடிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் நாயை போல், ஊர்ந்து செல்லவும், எச்சில் துப்பவும், நாய்களைப் போல குரைக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
ஹிந்துஸ்தான் பவர் லிங்க் என்கிற தனியார் நிறுவனத்தில் பணியாளர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. ஆபீஸின் டார்கெட்டை முடிக்கவில்லை என்பதற்காக, நாயை போன்று கழுத்தில் பெல்ட் கட்டி, அலைய வைப்பதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.
குடும்பத்திற்காக இதையும் அந்த ஊழியர்கள் சகித்துக் கொண்டிருப்பதுதான் நம்மை இன்னும் உலுக்குகிறது. இதையடுத்து, கேரள தொழில் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, எர்ணாகுளம் தொழிலாளர் துறைக்கு உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மாநிலத்தில் தொழிலாளர்களிடம் இதுபோன்ற நடத்தை எந்த நிலையிலும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.
பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த விவகாரத்தில் கேரள மாநில மனித உரிமைகள் ஆணையமும் மாநில இளைஞர் ஆணையமும் தலையிட்டு, இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
April 7, 2025