முதன் முறையாக பிஎஸ்என்எல்-ஐ முந்திய தனியார் நிறுவனம்.! வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸ்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடம்.
கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் ஐ விட அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தொலைத்தொடர்பு துறை ஆரம்பித்த காலத்திலிருந்து, முதன்முறையாக இந்தியாவில் தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 73.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் முதலிடத்திலும், பிஎஸ்என்எல் நிறுவனம் 71.3 லட்சம் வாடிக்கையாளர்களுடன் 2 ஆவது இடத்திலும், 62 லட்சம் வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் 3 ஆவது இடத்திலும் இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக வயர்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் கடந்த 3 வருடங்களாக தான் வயர்லைன் சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூலை மாதம் 2.56 கோடி தொலைபேசி வாடிக்கையாளர்களிலிருந்து இருந்து தற்போது 2.59 கோடி வாடிக்கையாளர்களாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடாபோன் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியே என்று சொல்லலாம்.