பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் புகைப்பட சர்ச்சை.! CPI(M) மகளிர் அணிக்கு பாஜக கண்டனம்.!
கேரள அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் (AIDWA) சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் புகைப்படம் இருந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI(M)) கட்சியின் அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் (AIDWA) சார்பில் ,பாகிஸ்தான் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அவர்களின் புகைப்படத்தை சுவரொட்டியில் பயன்படுத்தியுள்ளனர்.
பெனாசிர் பூட்டோ இதுவரையில் ஒன்பது கெளரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளது குறித்து சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கேரள பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எப்பொழுதும் நமது நாட்டை எதிர்க்கும் ஒரு நபரை அவர்கள் (CPI(M)) ஆதரித்து வருகிறார்கள் என கேரள பாஜகவினர் தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.