Pit Bull Dogs [File image]
சத்தீஸ்கர் : ராய்ப்பூர் அனுபம் நகர் பகுதியில் உள்ள டாக்டர் வீட்டிற்குள் சென்ற டெலிவரி பாய் ஒருவர், இரண்டு பிட்ட்புல் வகையை சேர்ந்த நாய்களால் கடித்து கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் பயங்கர வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராய்ப்பூர் போரியா மோட்டிநகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹித் கான் மகன் சல்மான் கான். இவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். எனவே, சல்மான் கான் டாக்டர் அக்ஷத் ராவ் வீட்டிற்கு பிவிசி பெனல்கள் கொடுப்பதற்காக சென்றார். அப்போது, டாக்டர் ராவ் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியவுடன், இரண்டு கருப்பு பிட்ட்புல் நாய்கள் சல்மான் கானை கொடூரமாக தாக்கியது. இந்த கொடூரமான சம்பவத்தில் உடல் முழுவதும் நாய்கள் கடித்து சல்மான் கான் காயமடைந்தார்.
இது தொடர்பான வைரலாகி வரும் வீடியோவில் ” பிட்ட்புல் நாய்கள் சல்மானை கடிக்க, அவர் வலியில் துடிக்கும் காட்சி உள்ளது. அதற்குப்பிறகு, சல்மான் வீட்டு வெளியில் உள்ள ஒரு நிறுத்தப்பட்ட கார் மீது ஏறி தன்னைப் பாதுகாத்துக் கொண்டார். நாய்கள் சல்மானை விட்ட பிறகு, ஒருவர் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவியதை வீடியோவில் காணலாம்.
சம்பவத்துக்குப் பிறகு, ஊடகங்களுக்கு பேட்டியளித்த சல்மான் “நிச்சியமாக மற்றொருவர் தனது இடத்தில் இருந்திருந்தால், உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை ,டாக்டர் ராவ், அவரது அனுமதியின்றி வீட்டுக்குள் சென்றதாக என்னை குற்றம் சாட்டுகிறார். ஆனால், நாய்கள் பற்றி முன்பாக எச்சரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சல்மான் சம்பவத்தை சனிக்கிழமை போலீசில் தெரிவித்தார். புகாரின் பேரில், போலீசார் நாய்களின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…