பிக்கப் டிரக், கார் நேருக்கு நேர் மோதி விபத்து..! 3 பேர் பலி, இருவர் படுகாயம்..!
புனேவில் உள்ள நெடுஞ்சாலையில் பிக்கப் டிரக் மாற்று கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
புனேவில் உள்ள அகமதுநகர் மற்றும் கல்யான் இடையேயான நெடுஞ்சாலையில் பிக்கப் டிரக் மாற்று கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். புனே நகரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்கல் கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
அகமதுநகர் மற்றும் கல்யான் இடையேயான நெடுஞ்சாலையில் காரில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பிக்கப் டிரக் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பிக்கப் டிரக் டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.