அமித்ஷாவை நெருங்க முயன்ற நபர் அதிரடி கைது.! போலி ஐடி கார்டு.! ஆந்திர முதல்வரின் பி.ஏ.?
பாதுகாப்பு வளையத்தை மீறி அமித்ஷாவை நெருங்க முயன்ற மர்ம நபர் பாதுகாவலர்களால் கண்டறியப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். அங்கு விநாயகர் கோவிலுக்கு பலத்த பாதுகாப்புடன் தரிசிக்க சென்றுள்ளார்.
அப்போது ஒரு மர்ம நபர் அமித்ஷாவை நெருங்க முற்பட்டுள்ளார். சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கப்பட்ட அந்த நபரை பிடித்து விசாரிக்க தொடங்கினர்.
அதில், அவர் தன்னை ஆந்திர முதலவரின் பி.ஏ என கூறிக்கொண்டு உள்ளே வந்தது தெரியவந்துள்ளது. மேலும், அந்த விழாவுக்கு வருகையில், போலி ஐடி கார்டு உபயோகித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
பின்னர் அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் மஹாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் ஹேமந்த் பவார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர் தற்போது போலீசார் விசாரணையில் இருக்கிறார். எதற்காக வந்தார் பிண்ணனி என்ன என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த நபர் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் வீடுகளின் அருகில் சுற்றி திரிந்த்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.