வரதட்சணையாக பைக் தராததால் ‘முத்தலாக்’ விவாகரத்து.! அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்ணின் தாயார்.!
2 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு தராததால் விவாகரத்து செய்த நபர். இதனை கேள்விப்பட்டு பெண்ணின் தயார் உயிரிழந்தார்.
வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், இன்னும் அது பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் சில உயிரிப்புகள் கூட அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
உத்திர பிரதேசம், லக்னோவில் திருமணத்தின் போது வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் வாங்கி தருவதாக கூறியதாகவும் அதனை வாங்கி தரவில்லை என்பதால் யூனஸ் என்பவர் தனது மனைவியை முத்தலாக் முறையின்படி விவாகரத்து செய்துள்ளார்.
தனது மகளின் விவாகரத்து செய்தியை அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்தை அடுத்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக யூனஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.