குடிபோதையில் அட்டகாசம்.. விளம்பர பலகையில் தொங்கியபடி பஸ் மீது விழுந்த நபர்..!

Default Image

தெலுங்கானாவில் குடிபோதையில் விளம்பர பலகையில் தொங்கியபடி பேருந்தின் மீது விழுந்த நபரின் வீடியோ இணையத்தில் வரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டையில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் சாலையில் உள்ள விளம்பர பலகையில் தொங்கி அட்டாகாசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் சித்திபேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்பட்டனர். பொதுமக்கள் அவரை காப்பாற்ற விளம்பர பலகை மீது ஏற முயற்சி செய்தனர்.

சிறிது நேரத்தில் அந்த நபர் கீழே வந்த மினி பேருந்தின் மீது விழுந்தார். பேருந்தில் விழுந்த அவரை பொதுமக்கள் கீழே இறக்கி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அனுப்பினர். இதுகுறித்து சித்திபேட்டை போலீஸ் கமிஷனர் கூறுகையில் அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்