ரூபாய் 50,000 கடன் வாங்கிய நபரிடம் 16 ஆண்டுகளாக கொடுமையை அன்பவித்த தமிழ் பெண்..!!

Published by
Dinasuvadu desk

தமிழகத்தைச் சேர்ந்த ஜானகி (34) என்னும் பெண், மாண்டியா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் 16 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. நில உரிமையாளரும், மாத்தூரில் முக்கிய அரசியல் பிரமுகருமான நாகேஷ் என்பவரிடம் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். 50,000 கடனை அடைக்க முடியாமல் 16 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்துள்ளார்.
Image result for கொத்தடிமைஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாகேஷிடம் இருந்து தப்பித்து வேறு எங்காவது போய் வாழலாம் என்னும் முடிவுக்கு வந்தார் ஜானகி. குழந்தைகளை அழைத்துக்கொண்டு தப்பித்தும் சென்றார். கோப்பா ஹோப்லி என்னும் கிராமத்துக்குச் சென்று தலைமறைவாகினார். ஜானகியை நாகேஷ் எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டார். தன் அடியாட்களுடன் ஜானகி வசிக்கும் இடத்துக்குச் சென்ற நாகேஷ், அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி இழுத்துச் சென்றுள்ளார். இந்தக் காட்சியை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர, தலித் அமைப்புகள் ஜானகிக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கின. நாகேஷ் ஜானகியை அடித்து, தரதரவென இழுத்துச் சென்று காருக்குள் ஏற்றும் அந்த வீடியோ தேசியளவில் அதிர்வலைகளை எழுப்பின. தலித் அமைப்புகள் நாகேஷுக்கு எதிராகப் போராட்டம் நடத்தின. இந்தச் சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஜானகியை மீட்டு, நாகேஷை கைது செய்தனர்.

ஜானகி மற்றும் அவரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் இலவச படிப்பும், ஜானகி மற்றும் அவரின் கணவருக்கு வேலைவாய்ப்பும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

DINASUVADU

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

6 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

7 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

8 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

8 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

9 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

9 hours ago