போனில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற நபர்! கார் மோதி உயிரிழப்பு…அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா : ஆபத்தை உணராமல் தொலைபேசி பேசிக்கொண்டு சாலையை கடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை விவரிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேட்சல்-போச்சரம் ஐடி காரிடாரி சாலையில் ஒருவர் போன் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போனில் பேசிக் கொண்டிருந்த கிரி என்ற நபர் முதலில் சாலையில் சென்று கொண்டு இருந்த வாகனங்களை கவனித்து கொண்டு இருந்தார். வாகனங்கள் சென்ற பிறகு தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது சாலையில் ஓரத்தில் வந்த பிறகு அங்கிருந்த வந்த ஒரு கார் வேகத்தை குறைத்தது.
இருப்பினும், அந்த நபர் கவனம் இல்லாமல் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தார் பின் கார் வேகமாக வந்த நிலையில், நபர் வேகமாக ஓடி சென்று சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது, அந்த கார் அவர் மீது மோதி இந்த சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட அவர் 10 மீட்டர் தள்ளி விழுந்து உயிரிழந்தார்.
சாலையைக் கடக்கும்போது கார் மோதியதில், 10 மீட்டர் தூரம் காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ அங்கு சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நபர் மீது ஏற்றிய அந்த கார் முதலில் மெதுவாக ஓரமாக நிற்பது போல சென்றுகொண்டு இருந்தது. பிறகு அந்த பாதியில் ஆட்கள் கூடியவுடன் கார் வேகமாக சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ఫోన్ మాట్లాడుతూ రోడ్డు దాటుతున్న వ్యక్తిని ఢీకొన్న కారు.. గాల్లోకి ఎగిరిపడి వ్యక్తి మృతి
మేడ్చల్ – పోచారం ఐటీ కారిడార్ వద్ద గిరి అనే వ్యక్తి ఫోన్ మాట్లాడుతూ రోడ్డు దాటుతుండగా కారు ఢీకొట్టింది.. దీంతో గిరి 10 మీటర్లు గాల్లో ఎగిరిపడి మరణించాడు. pic.twitter.com/bKq0f98Whv
— Telugu Scribe (@TeluguScribe) July 15, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025