பொற்கோவிலில் பரபரப்பு! முன்னாள் துணை முதலமைச்சரை நோக்கி துப்பாக்கி சூடு!
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை இன்று அமிர்தார்ஸில் உள்ள பொற்கோவில் வைத்து ஒரு நபர் துப்பாக்கியால் சூட முயற்சித்துள்ளார்.
பஞ்சாப் : அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சருமான சுக்பீர் சிங் பாதல் தங்கள் சீக்கிய மத அடிப்படையில் மத ரீதியிலான தண்டனை தொடர்பாக பஞ்சாப் அமிர்தரசிலில் உள்ள பொற்கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டும், பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார்.
இன்று காலையில் பொற்கோவில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதலை நோக்கி ஒரு முதியவர், தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சுட முயற்சித்தார். நல்வாய்ப்பாக இதனை கவனித்த அருகில் இருந்த நபர் ஒருவர், சட்டென அந்த நபரை தடுத்து துப்பாக்கியை மேல் நோக்கி உயர்த்தினார். இதனால் துப்பாக்கி குண்டு பொற்கோவில் சுவற்றை துளையிட்டது.
பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கியால் சுட முயற்சித்த நபர் பஞ்சாப் தல் கல்சாவைச் சேர்ந்த நரேன் சிங் சோர்ஹா என்பவர் ஆவார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.