மக்களே உஷார்.! வாட்சாப்பில் வந்த ஒரு செய்தி… ஒரே கிளிக்… 17 லட்சத்தை சுருட்டிய மர்ம கும்பல்.!

WhatsApp

சண்டிகரில் ஒரு நபராது வாட்டசாப் செயலிக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால்,  ரூ.16.91 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 

சண்டிகரில் உள்ள பெஹ்லானா பகுதியில் வசிக்கும்வசிக்கும் அலோக் குமார்எனும் நபராது செல்போன் எண் கொண்ட வாட்சாப் செயலிக்கு முகம் தெரியாத நபரிடமிருந்து செய்தி வந்ததுள்ளது. அவர் அதனை திறந்து பார்த்துள்ளார். ​அந்த செய்தியில் ஒரு லிங்க் இருந்துள்ளது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார்.

உடனே அந்த மர்ம கும்பல் அலோக் குமார் தொலைபேசியை ஹேக் செய்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16.91 லட்சத்தை எடுத்துவிட்டனர். சுமார் 17 லட்சம் பணத்தை இறந்தவுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் அலோக் குமார். இதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

வாட்சப் செயலியில் தெரியாத கணக்கில் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தியோ, தேவையற்ற லிங்க் ஆகிய ஏதேனும் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்