டெலிகிராமில் கசியவிடப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தகவல்கள்.! பீகாரை சேர்ந்த ஒருவர் கைது.!
டெலிகிராமில் வெளியான CoWIN தகவல்கள் தொடர்பாகபீகாரை சேர்ந்த ஒருவர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் டெலிகிராம் எனும் மொபைல் செயலியில் உள்ள பாட் வசதி எனும் பக்கத்தில் யாருடைய ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் உடனடியாக அவர்கள் பற்றிய முழுவிவரமும் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது கொரோன தடுப்பூசி செலுத்தும் போது நாம் கொடுத்த ஆதார் எண் , மொபைல் எண் ஆகியவை மூலம் இந்த தகவல்கள் கசிந்தது பின்னர் போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய டெல்லி போலீசார், தற்போது ஒருவரை கைது செய்துள்ளனர்.
சமூக ஊடக தளங்களில் CoWIN பக்கத்தில் இருந்து தரவுகளை கசியவிட்டதாக கூறி பீகாரை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவியதாக மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பீகார் மாநிலத்தவர் அவரது வீட்டில் இருந்தே கைது செய்யப்பட்டதாக கூறிய போலீஸார், அவரது தாயார் சுகாதார பணியாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.