#BREAKING :ப .சிதம்பரத்தை 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அதிரடி உத்திரவு
ப.சிதம்பரத்தை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வருகின்ற 26-ம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது .
மனு தள்ளுபடி
ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.பின் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பு
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில் , ஐ.என்.எக்ஸ் வழக்கில் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என கூறினார்.
மேலும் சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருறோம். எனவும் தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். ஐ.என்.எக்ஸ் வழக்கில் என் மீதும், எனது குடும்பத்தின் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என கூறினார்.
ப.சிதம்பரம் கைது
காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து காரில் சென்ற சிதம்பரத்தை பின் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டின் முன்வாசல் கதவு தட்டியும் யாரும் திறக்காததால் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை அதிகாரிகள் டெல்லி கவல்த்துறையின் உதவியுடன் சிதம்பரத்தை கைது செய்தனர் .அப்பொழுது சிதம்பரம் வீட்டு வாசலில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவரை கைது செய்து அழைத்து செல்லாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .பின்பு சிதம்பரத்தை சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். நேற்று இரவு முதலே சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்
சிபிஐ கோர்ட்டில் ஆஜர்
இந்த விசாரணை ஆனது விடிய விடிய நடைபெற்றது பின் அதிகாலையும் தொடர்ந்தது விசாரணை. இதனையடுத்து விசாரணைக்கு பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த மதியம் 3 மணி அளவில் மிகுந்த பாதுகாப்புக்கு இடையில் அழைத்து செல்லப்பட்டார்.
சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் மற்றும் அபிஷேக் சிங் மன்வி வாதிட்டனர்.சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா வாதிட்டார்.சுமார் 1.30 மணி நேரமாக வாதம் நடைபெற்றது.இதில் சிதம்பரம் தரப்பில் இருந்து சிபிஐ தரப்பினர் கேட்ட கேள்வியை கேட்கின்றனர் என்னுடைய மற்றும் என் மகன் வாங்கிக்கணக்கை ஏற்க்கனவே சமர்பித்துள்ளேன் .சிபிஐ யின் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைத்துள்ளேன் என்று சிதம்பரம் தரப்பில் வாதிட்டனர் .
ஆனால் சிபிஐ தரப்பிலோ சிதம்பரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உத்திரவு வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிட்டனர். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரத்தில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார்.இதனால் தீர்ப்பினை எதிர்பார்த்து நாடுமுழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது .
இறுதியாக வழக்கில் நீதிபதி , ப.சிதம்பரத்தை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் படி வருகின்ற 26-ம் தேதிவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது .