ரூ.4.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட ஒரு ஜோடி பிஸ்தா ஆடு..!
உத்திரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் தினத்தை முன்னிட்டு ஒரு ஜோடி ஆடு ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதேபோல் பக்ரீத் தினத்தை முன்னிட்டு உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவிலும் ஆடுகள் சந்தை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் லக்னோவின் கோம்தி ஆற்றங்கரையில் ஒரு ஜோடி ஆடு ரூ.4.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள இந்த ஆடுகள் 170 மற்றும் 150 கிலோ எடையுடையது. இந்த விலைக்கு காரணம் இதற்கு வழங்கப்பட்டுள்ள உணவுகளும் இதன் பராமரிப்பு முறையுமே என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆடுகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 ரூபாய் செலவு செய்து தானிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதாம், பிஸ்தா, முந்திரி, இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்கி இதனை வளர்த்துள்ளனர்.
இதற்கு ஷாம்பூ போட்டு குளிக்க வைத்து சுத்தமாக பராமரித்துள்ளனர். மேலும், இந்த ஆடுகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த கொலு கொலு ஆடுகள் ரூபாய் நான்கரை லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.