Categories: இந்தியா

ஷாக்கிங்!! அமுல் ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்! அதிர்ந்து போன நொய்டா பெண்மணி.!

Published by
கெளதம்

உத்தரப் பிரதேசம் : நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே, ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், நேற்று (ஜூன் 15) ஆன்லைன் டெலிவரி தளம் மூலம் தனது குழந்தைகளுக்கு ஒரு முக்கிய பிராண்டிலிருந்து ஐஸ்கிரீம் பெட்டியை ஆர்டர் செய்ததாக சமூக  வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த ஐஸ்கிரீம் பெட்டியைத் திறந்ததும், உள்ளே ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானை கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்போது, இந்த சம்பவத்தின் காட்சிகளை தீபா பகிர்ந்துள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இதே போன்ற மற்றோரு ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்தது.

Ice Cream – Human Finger [file image]
Yummo நிறுவன பட்டர்ஸ்காட்ச் கோனில்​​ 2 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு பெண் மருத்துவர் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், அது தொடர்பாக, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட இடம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

23 minutes ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

42 minutes ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

54 minutes ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

2 hours ago

பிரதமர் மோடி முதல்… தவெக தலைவர் விஜய் வரை.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

2 hours ago

அதிமுக நோ., விஜய் தான் டார்கெட்? திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago