ஷாக்கிங்!! அமுல் ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்! அதிர்ந்து போன நொய்டா பெண்மணி.!
உத்தரப் பிரதேசம் : நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே, ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், நேற்று (ஜூன் 15) ஆன்லைன் டெலிவரி தளம் மூலம் தனது குழந்தைகளுக்கு ஒரு முக்கிய பிராண்டிலிருந்து ஐஸ்கிரீம் பெட்டியை ஆர்டர் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த ஐஸ்கிரீம் பெட்டியைத் திறந்ததும், உள்ளே ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானை கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்போது, இந்த சம்பவத்தின் காட்சிகளை தீபா பகிர்ந்துள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இதே போன்ற மற்றோரு ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்தது.
Yummo நிறுவன பட்டர்ஸ்காட்ச் கோனில் 2 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு பெண் மருத்துவர் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், அது தொடர்பாக, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட இடம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.