பீகார் சட்டப்பேரவை சபாநாயகரை நீக்கும் தீர்மானம் வெற்றி!

Bihar Assembly

இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், அதிருப்தி காரணமாக கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து விலகி மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமானார். இதன்பின், பாஜக ஆதரவுடன் கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே,  பீகார் சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக பாஜக எம்எல்ஏ நந்த் கிசோர் யாதவ் நம்பிக்கையில்லா தீர்மனம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மகா கூட்டணி ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்தபோது ஆர்ஜேடி எம்எல்ஏ அத்வா பிஹாரி சௌத்ரி சபாநாயகர் ஆனார்.

இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

ஆனால், தற்போது அந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், பாஜகவுடன் கைகோர்த்ததால், ஆர்ஜேடி-யை சேர்ந்த சபாநாயகருக்கு எதிராக பாஜகவால் நம்பிக்கையில்லா கொண்டுவரப்பட்டது. இதன்மீதும், இன்று பீகார் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பீகார் சட்டசபை சபாநாயகர் அத்வா பிஹாரி சௌத்ரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, பீகார் சட்டப்பேரவை சபாநாயகரை நீக்கும் தீர்மானம் வெற்றி பெற்றது. 125 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனை அடுத்து பீகார் சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்தது. இதனால், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அத்வா பிஹாரி சௌத்ரி நீக்கம் செய்யப்படுகிறார். இதனைத்தொடர்ந்து, அடுத்ததாக பீகார் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்