இந்தியாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று..! 2 பேர் உயிரிழப்பு..!
கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் H3N2 பாதிக்கப்பட்ட 2 பேர் இன்ப்ளூயன்சாவால் உயிரிழப்பு.
எச்3என்2 வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றமடைந்து பரவுகிறது. அந்தவகையில் கர்நாடக மற்றும் ஹரியானா மாநிலங்களில் எச்3என்2 (H3N2) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் இன்ப்ளூயன்சா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்புளூயன்ஸா காய்ச்சலால் 90பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் எச்3என்2 (H1N1) காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.