வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் புதிய வசதி..!
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். இப்படி பல வசதிகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய வசதி அனைவருக்குமே மிக பயனுள்ளதாக அமையும்.
முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் எனப்படும் செல்லிடப்பேசி செயலியில் பயனாளர்கள் தாங்கள் கடைசியாக ஆன்லைனில் எப்போது வந்தோம், ஆன்லைன் காட்டுவது, தங்களது ப்ரொபைல் புகைப்படம் உள்ளிட்டவற்றை தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு காண்பிக்காத வகையில் இருக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இதுவரை வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அவர்களது ப்ரொபைல் புகைப்படம், கடைசியாக ஆன்லைனில் வந்த விபரம், தங்களை பற்றிய விபரம் ஆகியவற்றை தங்களது செல்போனில் இருக்கும் எண்களுக்கு அல்லது யாருக்கும் காண்பிக்காத வகையில் அல்லது அனைவரும் பார்க்கலாம் என்ற வகையில் மட்டுமே வசதி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு தங்களது ப்ரொபைல், ஆன்லைன் விபரம் உள்ளிட்டவற்றை காண்பிக்காத வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.