மும்பையில் கருப்பு பூஞ்சை பாதித்த 3 கொரோனா நோயாளிகளில் ‘எலும்பு மரணம்’ என்ற புதிய நோய்த் தொற்று பதிவாகியிருப்பதாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மும்பையில் கருப்பு பூஞ்சை நோய்தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்த 3 பேருக்கு சிகிச்சைக்கு பின்னர் “அவஸ்குலர் நெக்ரோசிஸ் (ஏ.வி.என்) என்ற இறந்த எலும்பு திசுக்கள் (எலும்பு மரணம்) ” என்ற புதிய நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி,மும்பையில் உள்ள மஹிம், இந்துஜா மருத்துவமனை, கோவிட் சிகிச்சை பெற்ற மூன்று 40 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ‘இறந்த எலும்பு திசுக்கள்’ நோய் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இது குறித்து,மஹிம், இந்துஜா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சஞ்சய் அகர்வாலா கூறுகையில்:”இந்த நோயாளிகளுக்கு அவர்களின் தொடை எலும்பில் கடுமையான வலி ஏற்பட்டது, அவர்கள் மருத்துவர்களாக இருந்ததால், அவர்கள் அறிகுறிகளை அடையாளம் கண்டு விரைவில் சிகிச்சை எடுத்தக் கொண்டனர்.
ஏ.வி.என் மற்றும் மியூகோமைகோசிஸுக்கு இடையிலான பொதுவான காரணங்கள் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு ஆகும்.காரணம்,இது கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் ஒரே மருந்து ஆகும். டாக்டர் அகர்வாலாவின் ஆய்வுக் கட்டுரை படி கொரோனா தொற்றிலிருந்து உயிர் காக்கும் ஸ்டீராய்டுகளை பெரிய அளவில் பயன்படுத்துவதால், ஏவிஎன் நோய்த்தொற்று பாதிப்புகள் மீண்டும் எழும்” என்று அவர் கூறினார்.
இதனால்,கொரோனா பாதித்தவர்களுக்கு ஏ.வி.என் அடுத்த புதிய நோய் பரவல் நிலையாக இருக்கலாம் என்றும்,அடுத்த சில மாதங்களில் ஏ.வி.என் நோய்த்தொற்றுகள் அதிகளவில் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.
இதற்கிடையில், கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மியூகோமிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 264 நோயாளிகளில் 30 பேர் ஒரே கண்ணில் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
மேலும்,அனுமதிக்கப்பட்ட அனைவருமே கண் அறுவை சிகிச்சையுடன் எண்டோஸ்கோபிக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,ஆனால் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 நோயாளிகள் ஒரு கண்ணில் பார்வை இழந்துவிட்டனர்.எனினும்,ஆரம்ப கட்டத்தில் வந்தவர்களுக்கு இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்தியதாக அம்மருத்துவமனை டீன் டாக்டர் என் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அவர்கள்,மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் (யூ.டி.) மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு ஆம்போடெரிசின்-பி கூடுதல் 2,12,540 குப்பிகளை அரசு ஒதுக்கியுள்ளது என்று சமீபத்தில் தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க ஆம்போடெரிசின்-பி பயன்படுத்தப்படுகிறது. இதனால், இவை மூக்கு, கண்கள், சைனஸ்கள் மற்றும் சில நேரங்களில் மூளைக்கு கூட சேதம் விளைவிக்கும்.கடுமையான மற்றும் மோசமான நோய்வாய்ப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையான ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் மியூகோமைகோசிஸ் மற்றும் இறந்த எலும்பு திசுக்கள் நோய் தூண்டப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…