வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்த நபர் ஒருவர் ரூ.6.16 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பெரும்பாலான பயனர்களால் மெட்டாவின் சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்கள் செய்திகளை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் சிலர் மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்கான மோசடி வேலைகளை செய்ய இதனை பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், நாக்பூரைச் சேர்ந்த 29 வயதான நபர் தனது வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ரூ.6.16 லட்சத்தை இழந்துள்ளார். ஒரு பெண் அவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு நிறுவனத்தைப் பற்றிய தகவல்ளை லிங்க் மூலம் அனுப்புவதாகவும், அதனை சரிபார்க்கும்படியும் கேட்டுள்ளார்.
அந்த இணைப்பை கிளிக் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.16 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது என்று அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…