மும்பையில் கொரிய பெண் யூடியுபரை, நேரலை (லைவ்) வீடியோவில் ஒருவர் துன்புறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியுபர் ஒருவர், மும்பையின் தெருக்களில் நேரலை வீடியோ பதிவிட்டுக்கொண்டிருந்தார், அப்பொழுது அந்நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த கொரியப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த கொரிய பெண் யூடியுபர் அவரிடமிருந்து விலகி வந்துள்ளார்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது, இது குறித்து அந்த கொரிய பெண் கூறியதாவது, என்னிடம் ஒருவர் தவறாக நடந்துகொண்டார், நான் அங்கிருந்து விலகி வந்தேன், அங்கிருந்த சில பேர் என் மீது தவறு இருப்பதாக கூறினார்கள், நான்தான் அவர்களிடம் பேச்சு கொடுத்து, அவர்களுக்கு இடம் கொடுத்ததாகக் கூறினார்கள். மேலும் அவர் இந்த வீடீயோவை, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Last night on stream, there was a guy who harassed me. I tried my best not to escalate the situation and leave because he was with his friend. And some people said that it was initiated by me being too friendly and engaging the conversation. Makes me think again about streaming. <a href=”https://t.co/QQvXbOVp9F”>https://t.co/QQvXbOVp9F</a></p>— Mhyochi in ???????? (@mhyochi) <a href=”https://twitter.com/mhyochi/status/1597867422975156226?ref_src=twsrc%5Etfw”>November 30, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
இந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் அந்த கொரியப்பெண்ணிடம் வந்து வண்டியில் லிப்ட் தருவதாகக்கூறி, கையைப் பிடித்து இழுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார், ஆனால் அந்த பெண் விலகி சென்றுள்ளார். ஆனால் அந்த வாலிபர் அவரது நண்பருடன் பைக்கில் பின்தொடர்ந்து வந்து மீண்டும் லிப்ட் தருகிறேன் என்று கூறி கொரிய பெண்ணை அழைத்துள்ளார்.
வீடியோ வெளி வந்த பிறகு, அந்த நபர்கள் மொபின் சந்த், மொஹம்மது ஷேக் என அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு மும்பையின் கார் போலிசார் அவர்களை கைது செய்தனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…