பிரதமர் பாதுகாப்புக்காக 12 கோடியில் வாங்கப்பட்ட நவீன ரக கார்..!

Default Image

Mercedes-Maybach S 650 என்ற நவீன வசதி கொண்ட கார் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் புறப்படும்போது ​​சிறப்பு பாதுகாப்புக் குழுவைத் தவிர, அவருடன் நவீன கார்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் இந்த வாகனத்தில் தற்போது புதிய கார் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. புதிய Mercedes-Maybach S 650 இப்போது பிரதமர் மோடியின் பாதுகாப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு மேலும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 (Mercedes-Maybach S 650) ரக கார் வாங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில், VR-10 லெவல் பாதுகாப்புடன் கூடிய சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் மாடலாகும். புதிய கார் தோட்டாக்கள் மற்றும் குண்டுவெடிப்புகளையும் தாங்கும். விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதி உள்ளது.

விஷ வாயு தாக்குதல் ஏற்பட்டால் காரில் சுவாசிக்க செயற்கை சுவாசக் கருவியும் உள்ளது. இந்த காரின்கண்ணாடிக்கு உட்புறம் பாலிகார்பனேட் பூசப்பட்டுள்ளது.  இந்த காரில் சேதம் அல்லது பஞ்சர் ஏற்பட்டாலும் கூட இயங்கும் வகையில் சிறப்பு ரன்-பிளாட் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸரில் (Toyota Land Cruiser) இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்தபோது பிரதமரின் பயன்பாட்டிற்காக டெல்லியில் உள்ள ஹைதராபாத் விருந்தினர் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. Mercedes-Maybach நிறுவனம் கடந்த ஆண்டு S600 கார்டை ரூ.10.5 கோடிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதே சமயம் எஸ்650யின் விலை ரூ.12 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்