காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

Sexual harassment

Puducherry: புதுச்சேரி சோலை நகரில் 4 நாட்கள் முன்பு காணாமல் போன 9 வயது சிறுமி, கால்வாயில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலைசெய்யப்பட்ட சிறுமி சோலை நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

READ MORE – இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்

புதுச்சேரி மாநிலம் சோலை நகரில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி, 3 நாட்கள் கழித்து நேற்று அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து சாக்கு மூட்டையில் கட்டியபடி, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

READ MORE – பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பத்தில் காலம் தாழ்த்தியதால், முத்தியால்பேட்டையில் வசிக்கும் மக்கள்ம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பதற்றம் நிலவியது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் முறையான விளக்கம் அளித்தனர்.

READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு

மார்ச் 1 அன்று நண்பகல் கனகதாசன் தெருவில் உள்ள ஒரு சிசிடிவியில் மட்டுமே சிறுமி நடந்த செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதை தவிர, மற்ற சிசிடிவிகளை ஆராய்ந்த போது, சிறுமியின் காட்சிகள் இடம்பெறவில்லை. இதனால், சிறுமி சோலை நகரை தாண்டிருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சோலை நகர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்தின்பேரில் விவேகானந்தன் (59), கருணாஸ்-ஐ (19) கைது செய்து விசாரித்ததில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் சடலத்தை சாக்குப் பையில் போட்டு கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தனர், இதனைத்தொடர்ந்து இதனை கொலை வழக்காக மாற்றி, அந்த இருவரை போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்