ஆக்ரா அருகே விமானப்படை விமானம் விபத்து.!
விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பாராசூட் மூலம் விமானி பத்திரமாக வெளியேறினார்.
உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரிலிருந்து விமானம் புறப்பட்டு,
பயிற்சிக்காக ஆக்ராவுக்கு சென்று கொண்டிருந்தபோது நேரிட்ட விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்திற்கு முன்பே விமானத்தில் இருந்து விமானி பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறி உயிர் தப்பியதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. போர் விமானம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
🚨 A MiG-29 fighter jet crashed near Agra today while en route from Adampur, Punjab. Fortunately, the pilot ejected safely. A Court of Inquiry has been ordered to investigate the cause. #MiG29Crash pic.twitter.com/tHYtMrF4vu
— Vishnu K Sajeev (@vishnu_ksajeev) November 4, 2024
விபத்தைத் தொடர்ந்து, விமானத்தின் சில பகுதிகள் 500 மீட்டர் சுற்றளவில் சிதறிய நிலையில், விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை, இந்திய விமானப்படை மற்றும் எச்ஏஎல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் குழுக்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இந்த விபத்தில் சிக்கிய விமானி பத்திரமாக உள்ளார், உயிர், பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று IAF ஒரு X பதவில் தெரிவித்துள்ளது.
A MiG-29 aircraft of the IAF crashed near Agra during a routine training sortie today, after encountering a system malfunction. The pilot manoeuvered the aircraft to ensure no damage to life or property on ground, before ejecting safely.
An enquiry has been ordered by the IAF,…
— Indian Air Force (@IAF_MCC) November 4, 2024