இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட அரபிக்கடல் பகுதியில் மேற்கிலிருந்து சுமார் 217 கடல் மைல் தூரத்தில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதலில் வணிக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
தீவிரவாத தாக்குதல்.. இணையதள சேவை நிறுத்தம்..!
சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூர் துறைமுகத்தை நோக்கி செம் புளுட்டோ (MV Chem Pluto) எனும் வணிகப்பலானது வந்து கொண்டிருந்தது. அந்த கப்பல் இந்திய கடல் எல்லையில் இருந்து 217 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது, ட்ரோன் மூலம் தாக்குதல் நடைபெற்று உள்ளது.
இதில் அந்தக் கப்பல் தீப்பிடித்தது விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் சுமார் 20 இந்தியர்கள் பயணித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது தீ அணைக்கப்பட்டுவிட்டது. இந்திய கடல் எல்லையில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதால், இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பலும், இந்திய கடற்படை கப்பலும் வணிக கப்பலை நோக்கி விரைந்துள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இந்தியாவை நோக்கி கச்சா எண்ணெய் கொண்டு வந்துள்ள வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சற்று அதிர்வை உண்டாக்கியுள்ளது. மேலும், அங்குள்ள 20 இந்தியர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்றுள்ளன.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…