இந்திய கடல் எல்லையில் கப்பல் மீது தாக்குதல்… 20 இந்தியர்கள் தவிப்பு.!

MV Chem Plutto ship attacked

இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட அரபிக்கடல் பகுதியில் மேற்கிலிருந்து சுமார் 217 கடல் மைல் தூரத்தில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதலில் வணிக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

தீவிரவாத தாக்குதல்.. இணையதள சேவை நிறுத்தம்..!

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூர் துறைமுகத்தை நோக்கி செம் புளுட்டோ (MV Chem Pluto) எனும் வணிகப்பலானது வந்து கொண்டிருந்தது. அந்த கப்பல் இந்திய கடல் எல்லையில் இருந்து 217 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது, ட்ரோன் மூலம் தாக்குதல் நடைபெற்று உள்ளது.

இதில் அந்தக் கப்பல் தீப்பிடித்தது விபத்து ஏற்பட்டது.  அந்த கப்பலில் சுமார் 20 இந்தியர்கள் பயணித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  தற்போது தீ அணைக்கப்பட்டுவிட்டது. இந்திய கடல் எல்லையில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதால், இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பலும், இந்திய கடற்படை கப்பலும் வணிக கப்பலை நோக்கி விரைந்துள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இந்தியாவை நோக்கி கச்சா எண்ணெய் கொண்டு வந்துள்ள வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சற்று அதிர்வை உண்டாக்கியுள்ளது. மேலும், அங்குள்ள 20 இந்தியர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்றுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்