“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மன்மோகன் சிங் (96) காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நேரிலும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். ஏற்கனவே, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
இறுதி ஊர்வலம்
இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெற உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில் ” இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு துயரமான சூழலில் இதை எழுதுகிறேன். டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்குகளை, நாளை அதாவது 28 டிசம்பர் 2024 அன்று, அவரது இறுதி சடங்கு நடைபெறும்” என அறிக்கையில் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். இறுதி சடங்குகளுக்கான பாரம்பரிய தளமான ராஜ் காட் அருகே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்
அதைப்போல, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ” இந்தியாவின் மகன் சர்தார் மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினாலும், உறுதியினாலும் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலே அவருக்கு கட்டக்கூடிய நினைவிடம் இருக்கவேண்டும் என்ற மேற்கண்ட கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்” எனவும் அந்த கடிதத்தில் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
आज कांग्रेस अध्यक्ष श्री @kharge ने प्रधानमंत्री जी और गृह मंत्री से फ़ोन पर बात करके व एक पत्र लिख कर भारतीय राष्ट्रीय कांग्रेस की ओर से पुरज़ोर अनुरोध किया कि भारत के सपूत सरदार मनमोहन सिंह जी का अंतिम संस्कार व स्मारक स्थापित करना ही उनको सच्ची श्रद्धांजलि होगी। pic.twitter.com/pNxh5txf0b
— Congress (@INCIndia) December 27, 2024