எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் எய்திய 20 இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் கடந்த மே மாதத்தில் அத்துமீறி அதிகாரத்தோடு நுழைந்து கூடாரங்களை அமைத்து மட்டுமின்றி தொடர்ந்து ஜூன் மாதத்தில் சீன – இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையிலான கைகலப்பில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளில் ராணுவமும், ஆயுதங்களும் குவிக்கப்பட்டு போர் தொடர்பான பதற்றமான நிலை ஏற்பட்டது. பின் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தைகள் பலகட்டமாக நடத்தப்பட்டது.
இதனிடையே தங்களது இன்னுயிரை தாய்மண்ணிற்காக தியாகம் செய்த 20 ராணுவ வீரர்களின் நினைவாக கல்வான் பகுதியில் நினைவுச் சின்னமானது அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வீரமரணம் எய்திய 20 வீரர்களின் நினைவாக கல்வான் பள்ளத்தாக்கில் லடாக் சாலையில் இந்நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தில், 2020ம் ஆண்டு ஜூன் 15ந்தேதி கமான்டிங் ஆபீசர் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான ராணுவப் பிரிவினர் இங்கு அமைக்கப்பட்டிருந்த சீனாவின் மக்கள் சுதந்திர ராணுவப் பிரிவு (பிஎல்ஏ) கூடாரங்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது அப்போது நடந்த கைகலப்பில் 20 இந்திய ராணுவ வீரர்கள் எதிரினடை திணரித்து உயிர் நீத்தனர். மேலும் இதற்கு முன் எதிரிகளின் கூடாரங்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அகற்றியது. மேலும் சீனாவின் பிஎல்ஏ ராணுவப் பிரிவுக்கும் பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. என்று வீரமரணம் அடைந்த 20 வீரர்கள் கல்வானின் வீரதீரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 1975ம் ஆண்டுக்கு பிறகு இந்திய – சீன எல்லைப் பிரச்சினையில் நடந்த உயிர்ப்பலிக்குப் பிறகு நடந்த நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…