மணிப்பூரில் ஏற்பட்ட புதிய வன்முறையில் குக்கி-ஜோ சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலி!
மணிப்பூரின் கொய்ரென்டாக் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட புதிய வன்முறையில் ஒருவர் பலியாகியுள்ளார். விவரங்களின்படி, நேற்று காலை 10 மணியளவில் குக்கி-ஸோ சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முப்பது வயதான ஜங்மின்லுன் காங்டே என்பவர் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில், வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் தனித்தனி நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 27 அன்று (ஞாயிற்றுக்கிழமை), மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் உள்ள நியூ லாம்புலேன் பகுதியில் மூன்று வீடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மே 3 அன்று மணிப்பூரில் இன மோதல்கள் வெடித்ததில் இருந்து 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.