தமிழகத்தை சேர்ந்த மதன்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரியில் ( Rajendra Institute of Medical Sciences – RIMS) முதுகலை தடவியல் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இன்று அதிகாலை RIMS மருத்துவ கல்லூரி விடுதி எண் 5 அருகே கீழே உள்ள முட்புதரில் பாதி எரிந்த நிலையில் மதன்குமார் உடலானது கிடந்துள்ளது. உடனடியாக ராஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற புகார்.! திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விசாரணைக்கு ஆஜர்.!
மதன்குமார் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மதன்குமார் மருத்துவ கல்லூரி விடுதியில் அறை எண் 79இல் தங்கி இருந்துள்ளார். அவர் உடல் கிடந்த மாடியில் இன்ஜின் ஆயில் சிதறி கிடந்துள்ளது. ஒருவர் கால் தடம் இருந்துள்ளது என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மதன்குமாரின் செல்போன், லேப்டாப் ஆகியவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு தான் மதன் குமார் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…