சிக்கிய ‘போலி’ அப்பா., ஒரு லட்ச ரூபாய் பைக் உடன் பறந்த திருட்டு பைக் பிரியர்.!
உ.பி மாநிலம் ஆக்ராவில் டீ கடைக்காரரை அப்பா என கூறி ரேஸிங் பைக்கை திருடி சென்ற நபர். தீவிர தேடுதலுக்கு பின்னர் பைக்கையம், திருடிய இளைஞரையம் போலீசார் கண்டுபிடித்தனர்.
ஆக்ரா : உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல்பட்டு வரும் ஒரு பழைய பைக் ஷோ ரூமில் டீ கடைக்காரரை அப்பா எனக்கூறி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக்கை ஒரு இளைஞர் திருடி சென்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பழைய பைக் ஷோ ரூம் ஊழியர் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலின்படி, கடந்த நவம்பர் 3ஆம் தேதி சாஹில் என்ற இளைஞர் பைக் ஷோ ரூம் வந்துள்ளார். அங்குள்ள ரேஸிங் பைக்குகளை பார்த்துவிட்டு, அதில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை தேர்வு செய்தார். பின்னர் அந்த பைக்கை தனது தந்தையுடன் வந்து வாங்கி கொள்வதாக கூறினார்.
பின்னர், தனது தந்தை எனக்கூறி ஒரு வயதான நபரை சாஹில் அழைத்து வந்தார். பிறகு, எங்கள் கடை ஊழியர் அந்த ரேஸிங் பைக்கை சாஹிலுக்கு டெஸ்ட் டிரைவ் அளிக்க சாவியை கொடுத்தார். அதனை வாங்கி கொண்டு வாகனத்தை எடுத்துச்சென்ற சாஹில் வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பவில்லை.
பிறகுதான் அந்த வயதான நபரை விசாரித்தோம். அப்போது அந்த வயதான நபர், தான் சாஹில் தந்தை இல்லை என்றும், சாஹில் எனக்கு தெரியும். எதோ முக்கியமான வேலை இருக்கிறது என அழைத்து வந்துவிட்டான் என்றும், தான் டீ கடையில் வேலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் ஷோ ரூம் ஊழியர்கள் அளித்த புகாரின் பெயரில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி லோஹாமண்டி காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கினர். அதில், நவம்பர் 6ஆம் தேதி சாஹிலுக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகனம் இருப்பது கண்டறியப்பட்டு, சாஹிலை கைது செய்த போலீசார் அந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.