டெல்லியின் கல்காஜியில் 32 வயதுடைய நபர் தனது தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொலை செய்துள்ளார்.
டெல்லியில் ஒரு நபர் குடும்ப பிரச்சனையில் தன் தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தென்கிழக்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் நேற்று முன்தினம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அஜய் குமார் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் உத்தரபிரதேசத்தில் ரே பரேலியைச் சேர்ந்தவர், இறந்த சகோதரர் விஜய் குமார் சாஹு ஆவார். இந்த சம்பவம் நடந்தவுடன், 32 வயதான குற்றவாளியை தனது சகோதரரை கொலை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். இருவருக்கும் குடும்ப தகராறு தொடர்பாக சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சாஹு தனது தம்பியை ஆத்திரத்தில் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து புனீத் பாட்டியா என்ற நபரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது இரத்த வெள்ளத்தில் விஜய் குமார் சாஹு இறந்து கிடந்துள்ளார், மேலும் அவரின் அருகில் சில டம்புல்ஸ் கிடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தவரின் தலையிலும், மார்பிலும் பலமுறை அடித்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…